- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரப்போகும் ரிங்கு சிங் – எந்த தொடரில் தெரியுமா? பிசிசிஐ வெளியிட்ட தகவல் இதோ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாட உள்ளது. அதில் வரும் ஜூலை 12 முதல் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டு சர்ப்ராஸ் கான் சேர்க்கப்படாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதே போல 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு கத்துக்குட்டியான வெஸ்ட் இண்டீஸை அடிக்க இளம் அணியை தேர்வு செய்யாமல் ரோஹித் தர்மா போன்ற சீனியர்களை தேர்ந்தெடுத்ததும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அந்த நிலைமையில் அந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களை அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அதில் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது மொத்த ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

லேட்டாக வரும் ரிங்கு:
ஏனெனில் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் ஏழை மகனாக பிறந்து போராடி கிரிக்கெட்டுக்கு வந்த அவர் 2018 முதலே பெஞ்சில் அமர்ந்து கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதனால் இந்த வருடம் முழுமையாக வாய்ப்பு பெற்ற அவர் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான உலக சாதனை வெற்றியை பெற்றுக் கொடுத்து மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்.

மேலும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் கடைசி பந்தில் பவுண்டரியுடன் ஃபினிஷிங் செய்தது உட்பட 14 போட்டிகளில் 474 ரன்களை 59.25 என்ற சிறப்பான சராசரியிலும் 149.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்த அவருக்கு நிச்சயமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ரிங்குவை கண்டு கொள்ளாமல் அவரை விட மும்பை அணியில் குறைவான ரன்களை எடுத்த திலக் வர்மாவை தேர்வு செய்தது.

- Advertisement -

அதை விட ஏற்கனவே தரமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறும் இந்திய பேட்டிங் வரிசையில் ஐபிஎல் தொடரில் அழுத்தமான மிடில் ஆர்டரில் இடது கை வீரராக அசத்திய அவரை 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் ஃபினிஷராக தேர்வு செய்யாத தேர்வுக்குழுவை ரசிகர்கள் மற்றும் முன்னாள் சரமாரியாக விமர்சித்தனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

அதில் ரிங்கு சிங் மட்டுமன்றி ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சென்னை அணிக்காக அசத்திய ருதுராஜ் போன்ற இதர சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரே நேரத்தில் அனைத்து வீரர்களையும் விளையாட வைக்காமல் படிப்படியாக வாய்ப்பு கொடுக்கும் முடிவை தேர்வுக்குழு எடுத்துள்ளதாக தெரிவிக்கும் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:என்ன தாதா மைண்ட் கேம்ஸ் விளையாடுறிங்களா? அதையும் பாப்போம் – கங்குலிக்கு முன்னாள் பாக் வீரர் பதிலடி, நடந்தது என்ன

“ரிங்கு சிங் போன்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இதர வீரர்கள் அயர்லாந்து சுற்றுப் பயணத்தில் விளையாடுவதற்கு தேர்வாக உள்ளனர். ஏனெனில் அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரே சமயத்தில் நெருக்கமாக வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு விரும்பவில்லை. மேலும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள 7 வீரர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு முக்கியமானவர்கள் என்பதால் அந்த டி20 தொடரில் விளையாடப் போவதில்லை. எனவே அவர்களுடைய இடத்தில் மீதமுள்ள இளம் வீரர்களுக்கு அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -