என்ன தாதா மைண்ட் கேம்ஸ் விளையாடுறிங்களா? அதையும் பாப்போம் – கங்குலிக்கு முன்னாள் பாக் வீரர் பதிலடி, நடந்தது என்ன

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வலுவான இந்தியா சிறப்பாக செயல்பட்டு 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு நிகராக வரும் அக்டோபர் 15ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வென்று இந்தியா கௌரவத்தை காப்பாற்றுமா என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

ஏனெனில் 1992 முதல் இதுவரை உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானிடம் தோற்காமல் தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபுறம் 30 வருடங்களாக தொடர் தோல்விகளை சந்திப்பதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து அனைத்திற்கும் மொத்தமாக பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

கங்குலிக்கு பதிலடி:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளைப் போல் அல்லாமல் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடாத காரணத்தால் தற்போதைய பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவின் கால சூழ்நிலைகள் புதிதாகவும் சவாலாகவும் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இருப்பினும் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் தோற்கடித்து 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக வீழ்த்திய தன்னம்பிக்கையை கொண்டுள்ள பாகிஸ்தான் இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நிலையில் இந்தியா ஒரு தலைப்பட்சமாக வென்று வருவதால் எதிர்பார்ப்பு மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரிவித்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தரமில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனால் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியே இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தாதா கங்குலி மைண்ட் கேம்ஸ் விளையாடுவதற்காகவே இப்படி தெரிவித்ததாக பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தங்களுடைய அணி நிச்சயமாக வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சௌரவ் கங்குலியின் அந்த கருத்து எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பிசிசிஐ முன்னாள் தலைவராக இருந்த அவர் கிரிக்கெட்டில் டாப் வீரராக விளையாடி நிறைய இளம் வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக அவர் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஐசிசி உலகக் கோப்பையில் இதற்கு முன் நீங்கள் எங்களை தோற்கடித்துள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2017 முதல் கதை அப்படியில்லை. 2021 டி20 உலக கோப்பையிலும் கடந்த ஆசிய கோப்பையிலும் இந்தியாவை நாங்கள் வீழ்த்தினோம்”

“மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் தரமான இன்னிங்ஸ் காரணத்தாலேயே இந்தியா வென்றது. குறிப்பாக வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அவர் தனி ஒருவனாக எங்களை தோற்கடித்தார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை விட இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை அதிக ரசிகர்களை ஈர்க்கும் என்றும் கங்குலி தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதும் போது இந்தியாவில் இருக்கும் சாலைகள் காலியாக இருக்கிறதா பிரதர்? இல்லை இந்தியா – பாகிஸ்தான் மோதும் போது தான் சாலைகள் வெறிச்சோடி இருக்கும்”

இதையும் படிங்க:பர்த்டே ஸ்பெஷல் : இந்தியா டூ ஐபிஎல் வரை கூலான கேப்டனாக எம்எஸ் தோனி படைத்துள்ள – சாதனைகளின் பட்டியல்

“ஏனெனில் அனைவரும் தொலைக்காட்சி முன்பாக தங்களுடைய அணி வெல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனவே இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி இந்தியா – பாகிஸ்தான் போட்டியை எப்போதும் நெருங்க முடியாது. எனவே தாதாஜி மனதளவில் எங்களுடன் விளையாடுவதற்கு முயற்சிக்கிறார் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Advertisement