சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றிருந்தார்.
அர்ஷ்தீப் சிங் ஏன் அறிமுகமாகவில்லை? : முன்னாள் வீரர் கேள்வி
இதன் காரணமாக இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஏதாவது ஒரு போட்டியில் நிச்சயம் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தனர்.
ஆனால் அவரை தவிர்த்து அணியில் இல்லாத வீரராக இருந்து கூடுதல் வீரராக அணிக்குள் வந்த அன்ஷுல் கம்போஜ்க்கு இந்த தொடரில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பில் அன்ஷுல் கம்போஜ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது ஏமாற்றத்தையும் அளித்தது.
இந்நிலையில் புதிதாக அணிக்குள் வந்த அன்ஷுல் கம்போஜ்க்கு வாய்ப்பு அளித்த நிர்வாகம் அர்ஷ்தீப் சிங்குக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை? என முன்னாள் வீரரான அருண் லால் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்திருந்தார். ஆனால் 16 பேர் கொண்ட அணியில் இல்லாத ஒரு வீரரை கொண்டு வந்து அவருக்கு அறிமுக வாய்ப்பினை கொடுத்த நிர்வாகம் ஏன் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க : தனது குருவான விராட் கோலி கொடுத்த கடைசி கிப்டை வீட்டு ஹாலில் மாறியுள்ள சிராஜ் – நெகிழவைத்த புகைப்படம்
இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி இருக்க வேண்டும். திறமையான அவரை இந்திய அணியின் நிர்வாகம் இந்த தொடரில் பயன்படுத்த தவறவிட்டது. அதேபோன்று அபிமன்யு ஈஸ்வரனையும் இந்திய அணி பயன்படுத்தாமல் விட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அருண் லால் கூறியது குறிப்பிடத்தக்கது.



