ரோஹித்துக்கு அப்புறம் இவர்தான் இந்திய அணியின் கேப்டனாக வருவார் – அடித்துக்கூறிய அருண் லால்

Rohith
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி அணியை நீண்ட காலமாக சிறப்பாக வழி நடத்தியதற்கு பிறகு கேப்டன் வெளியேறவே விராட் கோலி இடம் கேப்டன் பொறுப்பு வந்தது. விராட் கோலியும் நீண்ட காலமாக இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய வேளையில் ஐசிசி கோப்பைகளை அவரால் வெல்ல முடியவில்லை என்கிற காரணத்தினால் தற்போது ரோகித் சர்மாவிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரோகித்தும் இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணியை வழி நடத்தினாலும் வெகுவிரைவில் அவருக்கு பதிலாக எதிர்கால நீண்ட கேப்டனுக்கான தேடலை தற்போது இந்திய அணி எடுத்து வருகிறது.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் என்னதான் ரோகித் சர்மா சிறப்பாக கேப்டன்சி செய்தாலும் அவர் ஓய்வு எடுக்கும் போது எல்லாம் புதுப்புது கேப்டன்களை இந்திய அணி நியமித்து வருகிறது. அந்த வகையில் ரோகித்திற்கு அடுத்து கேப்டன்சி பதவிக்கு கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் வரிசை கட்டி நிற்கின்றனர். இதில் ராகுல் அடிக்கடி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறுவதால் அவருக்கு பதிலாக இன்னும் பிட்டாக இருக்கும் வீரரை நியமிக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கேப்டன்சி செய்து கோப்பையை வென்ற பாண்டியா தற்போது ஒரு ஆல்ரவுண்டராகவும் சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு கேப்டன் பதிவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அதே வேளையில் சமீபகாலமாகவே தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அசத்தலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் ரோகித் இல்லாத வேலைகளில் கேப்டன்சி செய்து வருகிறார்.

Rishabh Pant and Hardik Pandya

மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வழிநடத்துவதாலும், அது மட்டும் இன்றி இளம் வீரர் என்கிற காரணத்தினால் நீண்ட காலம் அவரால் கேப்டனாக இருக்க முடியும் என்கிற காரணத்தினாலும் அவர் மீதும் இந்திய நிர்வாகம் ஒரு கண் வைத்துள்ளது. இந்நிலையில் ரோகித்திற்கு பிறகு ரிஷப் பண்ட்டு தான் இந்திய அணியின் நிரந்த கேப்டனாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அருண் லால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்டை இனி ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் பார்க்காமல் கேப்டனாகவும் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்றும் ரோகித்திற்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

இதையும் படிங்க : IPL 2023 : அடுத்த சீசனுக்காக இப்போதே அதுவும் வெளிநாட்டில் தயாராகும் – மும்பை இந்தியன்ஸ் அணி

ஏனெனில் பயமே இல்லாமல் துணிச்சலாக விளையாடும் அவர் கேப்டன்சியிலும் நிச்சயம் அதிரடியான முடிவுகளை எடுப்பார் என்றும் அவரிடம் வெற்றிக்கான தேடல் எப்பொழுதுமே தென்படுவதால் நிச்சயம் அவரால் சிறந்த கேப்டனாக செயல்பட முடியும் என்றும் அருண் லால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement