இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான விராட் கோலி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து விட்டு இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
விராட் கோலிக்காக இந்திய அணி ஜெயிக்க வேண்டும் : அருண் துமால்
அதனால் அடுத்த உலக கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்கிற வேட்கை அவரிடம் உள்ளது. அதேபோன்று ரோகித் சர்மாவும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்குமே அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரானது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஆனாலும் அந்த உலக கோப்பை தொடர் வரை இந்திய அணியில் அவர்கள் இருவரும் நீடிப்பார்களா? என்ற கேள்வியும் பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரை விராட் கோலிக்காக இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என ஐ.பி.எல் சேர்மனான அருண் துமால் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக மிகச் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்கியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை சச்சின் டெண்டுல்கருக்காக விளையாடி எவ்வாறு தோனி கைப்பற்றி கொடுத்தரோ அதேபோன்று விராட் கோலிக்காக 2027 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுதர வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் இந்திய அணிக்காக தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் விடயத்தில் ஒரு போதும் நாங்கள் இதை நினைத்தது கிடையாது – பார்த்திவ் பட்டேல் கருத்து
எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரானது வரும்போது அவர் கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கி விடுவார். 18 ஆண்டு காலமாக இந்திய அணிக்காக மாபெரும் பங்களிப்பை வழங்கிய ஒருவருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி தர வேண்டும் என்று தான் விரும்புவதாகும் அருண் துமால் கூறியது குறிப்பிடத்தக்கது
.



