இன்னும் 5 விக்கெட் போதும்.. டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் – நிகழ்த்தவுள்ள சாதனை

Arshdeep-Singh
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது கடு விமர்சனங்களும் கடந்து சில நாட்களாகவே இருந்து வருகின்றன.

அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தவுள்ள சாதனை :

அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

- Advertisement -

இன்னும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத வேளையில் அந்த அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் இடம்பெற இருக்கிறார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் வெறும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை டி20 கிரிக்கெட்டில் படைக்க காத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங் :

- Advertisement -

இதுவரை 60 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரான யுஸ்வேந்திர சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார். அதுமட்டுமின்றி மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் முதல் இந்திய வீரராக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? – அவரது காயத்தின் நிலை என்ன?

தற்போதைய நிலையில் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அர்ஷ்தீப் சிங் 95 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்து புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடனும், பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement