இந்திய அணியின் முன்னணி நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வான அவருக்கு அறிமுக வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இங்கிலாந்து தொடரில் கடைசிவரை இடம் கிடைக்காமல் ஏமாற்றமே கிடைத்தது.
டி20 போட்டிகளில் சாதனை நிகழ்த்தப்போகும் அர்ஷ்தீப் சிங் :
இந்நிலையில் தற்போது 26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் ஒரு மாபெரும் சரித்திர சாதனைக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 99 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்கள் சார்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் அனுபவ சுழறந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் முதல் இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதோடு அவர் நிகழ்த்தப்போகும் சரித்திர சாதனை யாதெனில் :
இதற்கு முன்னதாக டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுப் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 71 டி20 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் அவங்க 2 பேரை சேக்காம கம்பீர் பெரிய தப்பு பண்ணிட்டாரு – மனோஜ் திவாரி கருத்து
நிலையில் தற்போது 63 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் வேளையில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக ரஷீத் கான் 53 போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும், வனிந்து ஹஸரங்கா 63 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



