உம்ரான் மாலிக் உடனான நட்பு எப்படி பட்டது தெரியுமா? தன்னுடைய பாட்னர் பற்றி – அரஷ்தீப் ஓபன்டாக்

- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. இதனால் கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய தயாராகும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் புது முகங்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். நீரும் நெருப்பும் போல வித்தியாசமான குணநலன்களையும் திறமையையும் பின்னணியையும் கொண்டுள்ள இவர்கள் இன்று இந்திய அணியில் வருங்கால வேகப்பந்து வீச்சு கூட்டணியில் அசத்தக் கூடியவர்களாக உருவாகியுள்ளார்கள்.

Arshdeep-Singh

- Advertisement -

இதில் 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அர்ஷிதீப் சிங் 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமாகி ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு இந்த வருடம் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் அறிமுகமானார். அதில் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் மிரட்டும் அவர் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை பறக்க விட துடிக்கும் டெத் ஓவர்களிலும் அசத்தலாகவே செயல்பட்டு நடைபெற்று முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர்களை மிஞ்சி சாதனை படைத்தார்.

வேகமும் விவேகமும்:

மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளராக மேலும் சிறப்பம்சம் கொண்ட இவர் வாசிம் அக்ரம், ஜாகிர் கான் போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் வருங்கால நட்சத்திரமாக அவதரிப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டுகிறார்கள். மறுபுறம் அப்படியே நேர்மாறாக ஜம்மு காஷ்மீரில் கிளப் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியான வேகத்தில் வீசியதால் 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக் 145 – 150 கி.மீ என்ற எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசி உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அதனால் இந்திய அணியிலும் அறிமுகமான அவர் அர்ஷ்தீப் போல விவேகத்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டுமே நம்பி ரன்களை வாரி வழங்கியதால் கழற்றி விடப்பட்டாலும் மீண்டும் போராடி அணிக்குள் வந்துள்ளார்.

ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜோடியாக அறிமுகமான இவர்கள் இடது – வலது கை பவுலர்களாக எதிரணிக்கு சவாலை கொடுப்பவர்களாக உள்ளனர். இந்நிலையில் பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக தெரிவிக்கும் அர்ஷிதீப் சிங் 135 கி.மீ வேகத்திலான தமது பந்துகளையும் 155 கி.மீ வேகத்திலான அவரது பந்தையும் ஒரே போட்டியில் மாறி மாறி எதிர்கொள்வது எதிரணி பேட்ஸ்மன்களுக்கு சவாலாக இருப்பதை தெளிவாக பார்க்க முடிவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உம்ரான் மாலிக்க்குடன் நான் மகிழ்ச்சியாக செயல்படுகிறேன். என்னை போலவே அவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை செய்வார். பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம். ஏனெனில் 155 வேகத்தில் அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஓவரிலேயே 135 வேகத்தில் எதிர்கொள்ளும் என்னை சந்திக்கும் போது தடுமாறுகிறார்கள். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம். ஒருநாள் போட்டிகள் மிகவும் பெரியதாகும். அதில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும்”

Arshdeep Singh

“அதனால் எப்போதுமே என்னுடன் எதிர்புறம் பந்து வீசும் பவுலரை நான் பார்ப்பேன். அவர் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை விட ரன்களை குறைவாக கொடுக்க நினைப்பேன். அதை செய்தாலே அழுத்தம் உண்டாகி யாருக்காவது விக்கெட் விழுந்து விடும். ஏனெனில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும்.

இதையும் படிங்க : IPL 2023 : மினி ஏலத்தில் தனது பெயரினை பதிந்த ஆஸி அதிரடி ஆல்ரவுண்டர் – கோடிகள் குவியப்போறது உறுதி

எனவே நான் எதிரணியை அட்டாக் செய்தால் என்னுடைய பார்ட்னர் பவுலர் கட்டுப்பாடாகப் பந்து வீசுவார்” என்று கூறினார். அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்தளவுக்கு புரிதல் கொண்டுள்ள இவர்கள் நிச்சயம் வருங்காலங்களில் பெரிய அளவில் வருவார்கள் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement