தெ.ஆ மண்னில் அசத்த.. என்னோட சிம்பிளான பிளான் இது தான்.. தொடர்நாயகன் அர்ஷ்தீப் பேட்டி

Arshdeep Singh 2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்று அசத்தியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றதால் சமனில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி டிசம்பர் 21ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சஞ்சு சாம்சன் 108, திலக் வர்மா 52 ரன்கள் எடுத்த உதவியுடன் 297 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா ஆரம்ப முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டோனி டீ ஜோர்சி 81 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சிம்பிள் பிளான்:
அந்த வகையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே தென்னாபிரிக்க மண்ணில் 2018க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகவும் 3 போட்டிகளிலும் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அரஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் ஸ்டம்ப் லைனில் நேராக வீசி எல்பிடபிள்யூ, போல்ட் முறையில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எளிதான திட்டத்தை பின்பற்றி இத்தொடரில் அசத்தியதாக அர்ஷிதீப் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் தம்மை போன்ற இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அசத்த உதவுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போட்டி நடைபெற்ற பிட்ச்சில் இன்றைய நாள் முழுவதும் ஏதோ ஒன்று இருந்தது. அதில் சில நேரங்களில் பந்து நின்று வந்தது. விக்கெட் டூ விக்கெட் முறையில் பந்து வீசி எல்பிடபிள்யூ மற்றும் போல்ட் செய்வதே என்னுடைய எளிமையான திட்டமாகும். எங்களுக்கு ஐபிஎல் நல்ல அடித்தளமாக அமைந்துள்ளது. எங்களைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இடையே பெரிய தூரம் இல்லை”

இதையும் படிங்க: நான் நம்ம பசங்க கிட்ட சொன்னது இதுமட்டும் தான்.. ஒருநாள் தொடரை கைப்பற்றிய பின்னர் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

“ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களின் மன நிலைமையை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு உதவுகிறது. எங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம். வருங்காலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நாங்கள் எங்களுடைய அனைத்தையும் இந்திய அணிக்காக கொடுக்க விரும்புகிறோம்” என்று கூறினார். முன்னதாக கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement