கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட கிளம்பிய அர்ஷிதீப் சிங்.. அவருக்கு அட்வைஸ் கொடுத்தது யார் தெரியுமா? – விவரம் இதோ

Arshdeep
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான 25 வயதான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டியில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 65 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீரராகவும் அவர் திகழ்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள வீரராக பார்க்கப்படும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுக வாய்ப்பை பெறவில்லை. ஆனாலும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரது மத்தியிலும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. ஏனெனில் அந்த அளவிற்கு அவரால் இருபுறமும் பந்தை ஸ்விங் செய்து அற்புதமாக வீச முடிகிறது என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தற்போது அவரது தரப்பிலிருந்து சில முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இங்கிலாந்து சென்று கவுண்ட்டி போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது மீண்டும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அங்கு சென்றுள்ளார். இதற்குப் பின்னால் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் அறிவுரையும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் அவர் கவுண்ட்டி கிரிக்கெட்டில் மீண்டும் தனக்கு விளையாட அழைப்பு வந்துள்ளதாக ராகுல் திராவிடம் தெரிவிக்க டிராவிட் உடனடியாக நீங்கள் அங்கு சென்று விளையாடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவரால் பந்து வீசும் முடியும்போது நிச்சியம் அவருக்கு அனுபவம் கிடைக்கும்.

- Advertisement -

மேலும் அங்கு இருக்கும் சூழல்களை அவர் கணித்து விளையாடினால் நிச்சயம் அது அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உதவும் என்றும் டிராவிட் அட்வைஸ் கொடுத்துள்ளாராம். ஏற்கனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் சிகப்பு பந்திலும் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் பும்ராவுடன் சேர்ந்து இந்திய அணியை அடுத்த சில ஆண்டுகளுக்கு முன்னோக்கி சொல்ல முடியும்.

இதையும் படிங்க : பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறப்போவது எந்த அணி? – வாசிம் ஜாபர் அளித்த கணிப்பு

அதன்காரணமாகவே அர்ஷ்தீப் சிங் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் இடம் பிடித்த விளையாடி வரும் வேளையில் தற்போது அர்ஷ்தீப் சிங்கும் இரண்டாவது முறையாக அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement