IND vs WI : இடதுகை பவுலர்களே இல்லை, அவரை டி20 உ.கோ அணியில் தாராளமா செலக்ட் பண்ணலாம் – இளம் வீரருக்கு முன்னாள் வீரர் ஆதரவு

IND Team
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1 * என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் முதல் முறையாக மண்ணை கவ்வி லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது.

Suryakumar yadhav

- Advertisement -

எனவே இம்முறை 5-வது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வரும் இந்தியா அதற்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாகவே பேட்டிங் வரிசையில் குறிப்பாக ஓப்பனிங் இடத்தில் சூர்யகுமார் யாதவ் உட்பட நிறைய வீரர்கள் சோதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் விளையாடப் போகும் 3 மற்றும் 4-வது வேகப்பந்து வீச்சாளரை கண்டறியும் வேலையும் நடைபெற்று வருகிறது.

அசத்தும் அர்ஷ்தீப்:
அதில் ஹர்ஷல் பட்டேல், சிராஜ், ப்ரஸித் கிருஷ்ணா, அவேஷ் கான் போன்ற வீரர்களை விட ஒருசில போட்டிகளில் விளையாடினாலும் நல்ல லைன், லென்த், கட்டர், ஸ்லோ பந்துகள், யார்கர் என சூழ்நிலைக்கு ஏற்றவாறு விவேகத்துடன் செயல்பட வேண்டிய அத்தனை யுக்திகளையும் சிறப்பாக செயல்படுத்தி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி துல்லியமாக பந்துவீசும் பவுலராக மெருகேறியுள்ளார்.

Arshdeep Singh IND vs WI

அதனால் ஐபிஎல் 2022 தொடரில் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு முதல் முறையாக முழுமையான வாய்ப்பைப் பெற்ற அவர் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 7.70 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்ததுடன் கடைசி கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர பவுலர்களை காட்டிலும் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். அதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டு அயர்லாந்து தொடர் வரை பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் இங்கிலாந்து டி20 தொடரில் வாய்ப்பு பெற்று தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 போட்டிகளிலும் கடைசிகட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி அசத்தி வருகிறார்.

- Advertisement -

இடதுகை பவுலர்:
மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பது இவருக்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. சொல்லப்போனால் ஜாஹீர் கானுக்கு பின் தரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று பாராட்டும் ரசிகர்கள் வரும் டி20 உலக கோப்பையில் இவருக்கு வாய்ப்புளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Sodhi

இந்நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் என அனைவருமே வலது கை வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பதால் இடது கை வேகப்பந்து இவருக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய வீரர் ரிதிண்டர் சோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே தேர்வுக்குழு இவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அர்ஷ்தீப் சிங் சர்வதேச அளவில் பெரிய போட்டிகளில் விளையாடும் அளவுக்கு தயாராகியுள்ளார். எனவே அவரது திறமையால் இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை அணியை தேர்வு செய்வதற்காக சுமார் 20 வீரர்களை தேர்வுக்குழுவினர் தங்களது மனதில் வைத்திருக்கலாம். அதில் 15 பேரை தேர்ந்தெடுக்கும் போது இவரும் இடம் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய கால சூழ்நிலைகளில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பயனாக அமையும்” எனக்கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் உலகக் கோப்பை மட்டுமல்லாது ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கும் அர்ஷ்தீப் சிங் தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: IND vs WI : அபரித வளர்ச்சி, தரவரிசையில் பாபர் அசாமை நெருங்கிய சூரியகுமார் சாதனை – தில்லுமுல்லு எனக்கூறும் பாக் ரசிகர்கள்

“ஆசிய கோப்பைக்கும் தேர்வாகும் அளவுக்கு அர்ஷ்தீப் சிங் ஒரு வலுவான வீரர். போட்டியை பற்றி சிந்திக்கக் கூடியவராக இருக்கும் அவரிடம் வேரியேஷனும் அழுத்தத்தை கையாளும் திறமையும் உள்ளது. இதே போல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வீரராக அவர் மாறிவிடுவார்” என்று கூறினார்.

Advertisement