எனக்கு அப்றம் சாதனை படைத்த பும்ரா பாயை வெல்கம் பண்ணேன்.. இதெல்லாம் அரிதாகவே கிடைக்கும்.. அர்ஷ்தீப் சிங்

Arshdeep Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து 57* ரன்கள் குவித்து சூப்பர் கம்பேக் கொடுத்தார்.

அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவை துல்லியமாக பந்து வீசிய இந்தியா வெறும் 74 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக தேவால்ட் ப்ரேவிஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

பும்ராவுக்கு வெல்கம்:

முன்னதாக அப்போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பின் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்தார். எனவே 100 டி20 விக்கெட்ஸ் கிளப்புக்கு உங்களை வரவேற்கிறேன் என்று அவரிடம் சொன்னதாக அர்ஷ்தீப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் கட்டாக் பிட்ச் வேகம், ஸ்விங் ஆகியவற்றுக்கு சாதகமாக இருந்தது தென்னாப்பிரிக்காவை சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் நவீன டி20 கிரிக்கெட்டில் அப்படிப்பட்ட பிட்ச் அரிதாகவே கிடைக்கும் என்று தெரிவிக்கும் அர்ஷ்தீப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய சிந்தனை செயல்முறை எளிதானது. அதாவது களத்துக்குச் சென்று பிட்ச்சில் கிடைக்கும் உதவியைப் பயன்படுத்தி அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும்”

- Advertisement -

அரிதான பிட்ச்:

“பந்தின் சீம் (தையல்) பகுதியைக் கடினமாக தரையில் அடித்தால் பிட்ச்சில் இருந்து ஏதோ ஒரு உதவி கிடைப்பதாக எனக்குத் தோன்றியது. எனவே அப்பகுதியை பிட்ச்சில் முடிந்தளவு கடினமாக அடிக்க வேண்டும் என்பதே ஐடியாவாகும். ஃபுல்லாக வீசிய பந்துகளிலும் விக்கெட் கிடைத்தது. அதே பந்து மற்றொரு தருணத்தில் பவுண்டரி சென்றது. இன்று ஜஸ்ப்ரித் பும்ராவிடம் கிளப்புக்கு வரவேற்கிறேன் என்று சொன்ன நான் வாழ்த்தினேன்”

இதையும் படிங்க: நேரலையில் அம்பலமான எம்ஐ, நிக்கோலஸ் பூரானின் ஃபிக்ஸிங்? ரசிகர்கள் விமர்சனம்.. நடந்தது என்ன?

“நான் நிகழ்காலத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் விளையாட முயற்சிக்கிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா பாய் அல்லது என்னால் பவர்பிளேவில் 3 ஓவர்களை போட முடியும் என்பது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது. நாங்கள் பும்ராவுக்கு வசதிகளை செய்து கொடுக்க முயற்சிக்கிறோம். அவருடன் சேர்ந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இது போன்ற ஸ்விங், வேகத்துக்கு சாதகமான பிட்ச்கள் அரிதாகவே கிடைக்கும். அங்கே நான் அதிகம் ஆர்வப்படாமல் அமைதியுடன் இருந்து கட்டுப்பாட்டுடன் விளையாட முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement