- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ராவின் இடத்தை திறமையான ராணாவை விட அர்ஷ்தீப் நிரப்ப சரியானவர்.. காரணம் இது தான்.. பாண்டிங் பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் நகரில் விளையாட உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா காயத்தால் முழுமையாக விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். இருப்பினும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் காயத்தை சந்தித்த அவர் தற்போது விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

பும்ராவுக்கு பதிலாக:

அது போன்ற சூழ்நிலையில் ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் நிலைமையை சமாளித்து வெற்றிக்கு பங்காற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதில் ஷமியின் பவுலிங் பார்ட்னராக ராணா அல்லது அர்ஷ்தீப் ஆகியோரில் யார் விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் என்ன தான் அர்ஷ்தீப் நல்ல அனுபவத்தைப் பற்றி இருந்தாலும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ராணாவுக்கு அதிகப்படியான ஆதரவை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபியில் பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங்கால் மட்டுமே நிரப்ப முடியும் என்று 2 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் பும்ராவுக்கு பதிலாக இடது கை பவுலரான அர்ஷ்தீப்புடன் விளையாடச் செல்வேன். டி20 கிரிக்கெட்டில் அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படக் கூடியவர் என்பதை நாம் அறிவோம்”

- Advertisement -

அர்ஷ்தீப் சரியானவர்:

“புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் பும்ரா வெளிப்படுத்தக்கூடிய அதே திறனை அவரும் கொண்டிருக்கிறார். அதைத்தான் இந்தியா மிஸ் செய்கிறது. இது ராணாவிடம் இருந்து எதையும் எடுக்கப்போவதில்லை. நிறைய திறமையைக் கொண்டுள்ள அவரால் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் போல அவரால் அசத்த முடியாது”

இதையும் படிங்க: விராட் கோலியுடன் பாபர் கம்பேர் பண்றவங்க முட்டாள்.. ஆனா 2 பேருமே தடுமாறுறாங்க.. கம்ரான் அக்மல்

“இடது கை வீரரான அர்ஷ்தீப் புதிய பந்தை நகர்த்தக் கூடியவர். இது போன்ற ஐசிசி தொடரில் எதிரணியின் டாப் ஆர்டரில் வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அவரைப் போன்ற இடது கை பவுலர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே நான் இந்திய அணியில் இருந்தால் இதையே செய்வேன்” என்று கூறினார்.

- Advertisement -