ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மோதிய போது இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சுமாரான ஃபார்மில் இருப்பது கவலையை கொடுப்பதாக முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள் என்றும் அவர் சாடியுள்ளார். ஏனெனில் விராட் கோலி வித்தியாசமான கிளாஸ் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முட்டாள்களின் ஒப்பிடு:
அத்துடன் விராட் கோலியை விட சுமாரான ஃபார்மில் இருக்கும் பாபர் அசாம் விரைவில் சதத்தை அடித்து தன்னுடைய கேரியரில் 30 – 35 சதங்களை அடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கம்ரான் அக்மல் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு நிகராக பாபர் அசாமை மதிப்பிடுபவர்கள் முட்டாள்கள்”
“விராட் கோலி மிகவும் பெரிய வீரர். அவர் உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டில் உள்ளவர்களுக்கு ரோல் மாடல். தன்னுடைய விளையாட்டை அவர் மிகவும் ஆர்வத்துடன் விளையாடுகிறார். அது போன்ற வீரர்கள் மிகவும் கடினமாக போராடி வருவார்கள். அந்த வகையில் விராட் கோலி தம்முடைய பெஞ்ச் மார்க்கை உயர்தரமாக நிர்ணயித்துள்ளார். எனவே அந்த இருவருக்கும் இடையே எந்த ஒப்பீடுகளும் கிடையாது”
ஃபார்முக்கு வரணும்:
“பெரிய வீரரான விராட் கோலியும் கடந்த சில வருடங்களாக ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். கடந்த ஐந்து வருடங்களில் அவர் 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். பாபர் அஸாமும் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். இந்த சூழ்நிலைகளில் அவர் தனது செயல்முறைகளை பின்பற்ற வேண்டிய நிலைமையில் உள்ளார்”
இதையும் படிங்க: விக்கெட் கீப்பராக இல்லனாலும் இப்படி ஒரு வாய்ப்பு ரிசப் பண்ட்க்கு தாங்க.. கண்டிப்பா அசத்துவாரு – கோச் கருத்து
“மொத்த பாகிஸ்தானும் அவருடைய இருபதாவது ஒருநாள் சதத்துக்காக காத்திருக்கிறார்கள். ஒருவேளை அது சாம்பியன்ஸ் டிராபியில் வரலாம். அவர் குறைந்தது ஒருநாள் கிரிக்கெட்டில் 30 – 35 சதங்கள் அடிப்பதை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார். முன்னதாக பாபர் அசாம் கடந்த 3 – 4 வருடங்களாகவே பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



