அவர் தான் எனக்கு மிகவும் பிடித்த புதிய இந்திய ஃபாஸ்ட் பவுலர் – இளம் வீரரை பாராட்டும் ஜாம்பவான் பிரட் லீ

Lee
- Advertisement -

நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதிலாக புதிய இளம் அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ள பிசிசிஐ இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க துவங்கியுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுத் துறையில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் மட்டுமே வாய்ப்பு பெற்ற அர்ஷிதீப் சிங் இந்த நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதல் முறையாக வாய்ப்பை பெற்றுள்ளார்.

INDIA Arshdeep Singh Harshal Patel

- Advertisement -

பஞ்சாப்பை சேர்ந்த இவர் கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தால் 2019இல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி கடந்த சில வருடங்களாக தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமாகி உம்ரான் மாலிக் போல் அல்லாமல் சீரான வேகத்தில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களுடன் சிறப்பாக பந்து வீசியதால் டி20 உலக கோப்பைக்கு தேர்வானார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் புதிய பந்தை ஸ்விங் செய்து குவிண்டன் டீ காக், பாபர் அசாம் போன்ற தரமான பேட்ஸ்மேன்களை காலி செய்த அவர் டெத் ஓவர்களிலும் சிறப்பாகவே பந்து வீசினார்.

பிடித்த பவுலர்:

முதல் முறையாக உலகக் கோப்பை போன்ற அழுத்தமான தொடரில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டி தவிர்த்து பெரும்பாலும் அசத்தலாக செயல்பட்ட அவர் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய சீனியர்களை மிஞ்சி அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார். அப்படி இடது கை வேகப்பந்து வீச்சாளராக அசத்தும் அவர் வாசிம் அக்ரம், ஜஹீர் கான் போன்ற ஜாம்பவான்களைப் போல் செயல்படுவதாக சில முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Arshdeep-Singh

அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் ப்ரட் லீ தற்போதுள்ள இளம் இந்திய பவுலர்களில் அர்ஷிதீப் சிங் தமக்கு மிகவும் பிடித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது அர்ஷிதீப் சிங் – அவரை நான் துருப்புச் சீட்டு என்றழைப்பேன். ஏனெனில் இது அவருக்கு பொருந்தக்கூடிய பட்டப் பெயராக தெரிகிறது. அவரிடம் நிச்சயமாக துருப்புச் சீட்டாக செயல்படும் திறமைகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜஸ்ப்ரித் பும்ரா கடைசி நேரத்தில் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறிய தருணத்திற்கு நாம் செல்வோம்”

- Advertisement -

“அப்போது அவரது இடத்தை நிரப்ப வேண்டிய மிகப்பெரிய கவலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. ஏனெனில் ஜஸ்பிரிட் பும்ரா உலகத்தரம் வாய்ந்த யார்கர் பந்துகளை வீசும் சூப்பர் ஸ்டார். அவர் நிச்சயமாக உங்களது அனைத்து வகையான கிரிக்கெட்டின் பவுலர். குறிப்பாக டெத் ஓவர்களில் அசத்தலாக செயல்படுபவர். ஆனால் கிரிக்கெட்டில் ஒருவரது இழப்பு மற்றொருவருக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்பார்கள். அந்த இடத்தில் அர்ஷிதீப் சிங் உலக கோப்பை எனும் மிகப்பெரிய இடத்தில் அதுவும் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். அங்கு அவர் எதற்காக தேர்வு செய்யப்பட்டார் என்பதை செயலில் காட்டினார். எனவே அவர் எனக்கு மிகவும் பிடித்த இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்”

Lee

“அவரிடம் இருக்கும் தெளிவான நுணுக்கம், தேவையான தன்னம்பிக்கை ஆகியவை அவரால் டாப் முதல் மிடில் வரை அனைத்து இடங்களிலும் பந்து வீச முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு கொடுக்கிறது. அதைவிட டெத் ஓவர்களில் அவர் சிறப்பாக செயல்படுவதாலேயே அவரை நான் துருப்புச் சீட்டு என்றழைக்கிறேன்” என கூறினார். முன்னதாக சமீபத்திய ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளான அர்ஷிதீப் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு இந்த உலக கோப்பையில் ஜாம்பவான்களின் பாராட்ட பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement