வெறும் 59 போட்டிகளிலேயே பும்ராவை பின்னுக்கு தள்ளி அசத்திய அர்ஷ்தீப் சிங் – டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை

Arshdeep-Singh
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது :

ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்கு தள்ளிய அர்ஷ்தீப் சிங் :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த மைதானம் அளவில் சிறியது என்பதனால் தென்னாப்பிரிக்க அணி இறுதி வரை வெற்றிக்காக போராடியது.

- Advertisement -

ஆனாலும் 20 ஓவர்களின் முடிவில் அந்த அணியால் ஏழு விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான ரிக்கல்டன், கிளாஸன் மற்றும் மார்கோ யான்சென் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக அசத்தலான சாதனை ஒன்றின் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : நேற்று அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளையும் சேர்த்து அவர் இதுவரை டி20 கிரிக்கெட்டில் 92 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக 96 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள யுஸ்வேந்திர சாஹல் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் வேளையில் தற்போது இரண்டாவது இடத்தை அர்ஷ்தீப் சிங் பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பும்ரா 89 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவுக்கு பிறகு அசத்தலான சாதனையை நிகழ்த்திய – ரமன்தீப் சிங்

இவ்வேளையில் இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்போது அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தியுள்ளார். தற்போது வெறும் 59 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 92 விக்கெட்டுகளை எடுத்துள்ள வேளையில் வெகுவிரைவாக அடுத்த 8 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement