ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மோர்னே மோர்கலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் – என்ன நடந்தது?

Arshdeep Singh
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 50 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் அடுத்ததாக தரம்சாலா நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது மிகச் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 13 ரகளை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

மோர்னே மோர்கலிடம் மன்னிப்பு கேட்ட : அர்ஷ்தீப் சிங்

சொந்த மாநிலமான சண்டிகார் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அடுத்த போட்டியிலேயே மீண்டும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. அதோடு பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து வீசும் அவரை தொடர்ச்சியாக துவக்க ஓவர்களில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆதரவுகளும் குவிந்து வருகிறது.

- Advertisement -

அர்ஷ்தீப் சிங்கை பொருத்தவரை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக தனது இடத்தினை ஏற்கனவே உறுதி செய்து விட்டார். இருப்பினும் அவ்வப்போது அவர் பந்துவீச்சில் சறுக்கலை சந்திக்கையில் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலை பலரும் விமர்சிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது அவர் 6 ஒயிடுகளை ஒரே ஓவரில் வீசும் போது அடிக்கடி தொலைக்காட்சியில் மோர்னே மோர்கலின் முகம் காட்டப்பட்டது. ஏனெனில் பந்துவீச்சு பயிற்சியாளரான அவர் சரியான திட்டத்தை கொடுக்கவில்லையா? அல்லது அவர் மோசமாக பயிற்றுவிக்கிறாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் அவர் மீது எழுந்தன.

- Advertisement -

இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல்லிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக மூன்றாவது டி20 போட்டி முடிந்த பின்னர் அர்ஷ்தீப் சிங் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த போட்டிக்கு பின்பாக என்னிடம் பேசிய மோர்னே மோர்கல் என்னை அதிக நேரம் ஸ்கிரீனில் காண்பிக்க டைம் கொடுத்து விட்டாய் என்று கூறினார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி இந்த பையனை வாங்கினால் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் – சுரேஷ் ரெய்னா கருத்து

ஏனென்றால் நான் இரண்டாவது போட்டியின் போது ஒயிடு வீசிய ஒவ்வொரு முறையும் கேமராக்கள் அனைத்தும் மோர்கல் பக்கமாகவே திரும்பியது. என்னுடைய மோசமான பந்துவீச்சுக்கு அவரே காரணம் என்பது போல் அந்த காட்சி பதிவாகி இருந்தது. ஒருவேளை பந்துவீச்சு பயிற்சியாளர் எனக்கு சரியான திட்டங்களை கொடுக்கவில்லை. பந்துவீச்சில் நல்ல பயிற்சியை அவர் அளிக்கவில்லை என்கிற தவறான எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்காக தான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement