முதல் டி20 போட்டி முடிந்த பின்னர் யுஸ்வேந்திர சாஹலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

Arshdeep
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது :

சாஹலிடம் மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப் சிங் :

7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது செயல்பாடு குறித்து அர்ஷ்தீப் சிங் பேசுகையில் முன்னதாக : யுஸ்வேந்திர சாஹலின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக காதுகளின் மீது கை வைத்தவாறு மன்னிப்பு கேட்டு சைகை செய்தால். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : ரசித் கான் மாதிரி தில்லா வருண் சக்ரவர்த்தி இதை செய்றாரு.. கம்பேக் ரகசியம் பற்றி ஆகாஷ் சோப்ரா

இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு தருணம். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டுக்காக இன்னும் நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து என்றும் நன்றி உள்ளனாக இருப்பேன் என அர்ஷ்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement