காற்று பலமா அடிச்சுது.. இந்த 2 டெக்னிக் மாற்றங்களை செஞ்சேன்.. வங்கதேச வீழ்த்திய ஆட்டநாயகன் அர்ஷ்தீப் பேட்டி

Arshdeep Singh
- Advertisement -

குவாலியரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த வங்கதேசம் 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு உருண்டது அதிகபட்சமாக கேப்டன் சான்டோ 27, மெகதி ஹசன் 35 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 128 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் 29, கேப்டன் சூரியகுமார் யாதவ் 29, ஹர்திக் பாண்டியா 39* ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதனால் 11.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா எளிதான வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன் காரணமாக டெஸ்ட் தொடரை போலவே டி20 தொடரிலும் வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய இந்தியா நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் அர்ஷ்தீப்:

இந்த வெற்றிக்கு 3.5 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது அனுபவத்தால் முன்னேறி வருவதாக அர்ஷ்தீப் கூறியுள்ளார்.

இப்போட்டியில் ஆரம்பத்தில் விக்கெட் கிடைக்காத போது தம்முடைய டெக்னிக்கில் சில மாற்றங்கள் செய்து விக்கெட்டுகளை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் பந்து வீசிய பக்கத்தில் இருந்து காற்று அதிகமாக அடித்தது. ஆரம்பத்தில் என்னால் விரும்பியது போல் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இருப்பினும் கையில் இருந்து பந்து நன்றாக வந்தது”

- Advertisement -

சிறிய மாற்றம்:

“அப்படியே என்னுடைய ஓடி வரும் ரன் அப் மற்றும் மணிக்கட்டில் சிறிய மாற்றத்தை செய்தேன். தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். ஏற்கனவே இருக்கும் அனுபவத்துடன் நீங்கள் தொடர்ந்து விளையாடும் போது இன்னும் முன்னேற்றமடைவீர்கள். எங்கள் அணியில் அனைவரும் நன்றாக பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: மிஸ்ஸாகிடுச்சு.. அடுத்த 2 மேட்ச்ல இந்த ப்ளானை வெச்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. வங்கதேச கேப்டன் பேட்டி

“குறிப்பாக மயங் யாதவ் சிறப்பாக பந்து வீசினார். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எந்தளவுக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உங்களை உட்படுத்திக் கொண்டு அசத்துகிறீர்கள் என்பது சிறந்த விஷயமாகும். பிட்ச், மைதானத்தின் அளவு ஆகியவற்றை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு என்னால் எப்படி உட்படுத்திக் கொள்ள முடியும், எப்படி வேகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதே என்னுடைய உத்வேகமாகும்” என்று கூறினார்.

Advertisement