- Advertisement -
இந்திய கிரிக்கெட்

1996 இலங்கை அணி இப்போதைய இந்தியாவை 3 நாளில் சாய்க்கும்.. அது நம்மை அழிக்கப் போகுது.. ரணதுங்கா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் சிறந்த அணிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி 2023 உலகக் கோப்பை ஃபைனல் வரை முன்னேறியது. 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா 3 வகையான கிரிக்கெட்டிலும் தரமான வீரர்களுடன் அசத்தி வருகிறது.

மறுபுறம் 90களில் மிகப்பெரிய எழுச்சி கண்ட இலங்கை 2014 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறும் இலங்கை இப்போதெல்லாம் சொந்த மண்ணில் வெல்வதற்கே போராடுகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் தற்சமயத்தில் உள்ள இந்திய அணியை தனது 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி மூன்று நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்கடிக்கும் என்று அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

3 நாளில் வீழ்த்துவோம்:

மேலும் ஐபிஎல் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்க வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் தரமான வீரர்களை உருவாக்குவதில் இலங்கையும் இந்தியாவும் ஒரே அளவில் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கக்கூடிய ராட்சசனை நாம் உருவாக்கியுள்ளோம். 90களின் ஆரம்பத்தில் நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தேன்”

“அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத் ஆகியோர் இருந்தார்கள். அவர்களை 2 முறை எங்களால் அவுட்டாக்க முடியவில்லை. பின்னர் அசாருதீன், டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வினோத் கம்ப்ளி வந்தார்கள். அவர்களைப் போன்ற கிளாஸ் நிறைந்த வீரர்கள் இந்தியாவிடம் இப்போது இருக்கிறார்களா? எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

தரம் எங்கே:

“நான் உங்களிடம் நேரடியாக சொல்கிறேன். சமீந்தா வாஸ், முரளிதரன் ஆகிய பவுலர்களைக் கொண்டுள்ள என்னுடைய இலங்கை அணி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 3 நாட்களில் வீழ்த்தும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு தரம், டெக்னிக், மூளை தேவை. அந்த வகையில் நாம் நமது இளம் வீரர்களுக்கு சரியான கிரிக்கெட்டை கற்றுக் கொடுக்கிறோமா?”

இதையும் படிங்க: 150 ரன்ஸ்.. தெ.ஆ வீரரின் உலக சாதனை அறிமுகம் வீண்.. கோலியை முந்திய வில்லியம்சன்.. ஃபைனலில் நியூஸிலாந்து

“இப்போது இந்தியாவால் கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத், டெண்டுல்கர், டிராவிட் போன்ற வீரர்களை உருவாக்க முடிகிறதா? எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. இலங்கையிலும் இதே பிரச்சனை தான் இருக்கிறது. இப்போதுள்ள வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமலேயே பணத்தைப் பெறுகிறார்கள். அதனால் 5 வருடங்கள் கழித்து நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற மதிப்பான எண்ணம் வீரர்களிடமிருந்து காணாமல் போய்விடும்” என்று கூறினார்.

- Advertisement -