சச்சினின் மகன் என்பதால் அணியில் இடமா ? – சர்ச்சையை ஏற்படுத்திய மும்பை இந்தியன்ஸ் புகைப்படம்

arjun tendulkar

வரும் சனிக்கிழமை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடருக்காக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இறுதியில் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் போட்டி துவங்க நான்கு நாட்களே உள்ள நிலையில் தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இணைந்துள்ளதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arjun 1

மும்பை அணியின் வீரர்களான ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், ராகுல் சாகர் ஆகியோருடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் ராகுல் சாகர் மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் கொரொனோ விதிமுறைகளை மீறி எவ்வாறு அர்ஜுன் டெண்டுல்கர் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தார் மேலும் அவர் மும்பை அணி வீரர் கிடையாது அப்படி அவர் அணியில் இணைந்தார் அதை ஏன் தெரிவிக்கவில்லை.

மேலும் வீரர்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். சச்சினின் மகன் என்பதால் கிடைத்த சலுகையா ? என்பதுபோல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியிலும் எடுக்கப்பட வில்லை இருந்தாலும் அவர் மும்பை அணிக்காக நெட் பவுலராக வந்திருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

arjun 3

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் அந்தந்த அணிகளுடன் சேர்த்து வலைப்பயிற்சிகளில் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக பந்துவீச நெட் பவுலர்களை அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் நெட் பவுலராக உள்ளார். அவர் வீரராக அல்லாது நெட் பவுலராக மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச உதவிக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

arjun 2

இடது கை பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் பங்களிப்பினை அளிக்க கூடியவர். சச்சின் டெண்டுல்கர் இடம் இருந்து பல நுணுக்கங்களை கற்று இவர் உள்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை எந்த ஐ.பி.எல் அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.