அதுல தோனியை விட யாரும் சிறந்தவர் கிடையாது.. தோனியால் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.. ஐபிஎல் சேர்மேன்

Arun Dhumal
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இம்முறை 2021இல் நீக்கப்பட்ட அன்கேப்ட் பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த விதிமுறை முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்றுள்ளார். இருப்பினும் தற்போது 42 வயதை கடந்துள்ள அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலையில் உள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தோனியை குறைந்த விலைக்கு தக்க வைக்க அந்த விதிமுறையை கொண்டு வருமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே கோரிக்கை வைத்தது.

- Advertisement -

சிறந்த கேப்டன் தோனி:

அதை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ தோனிக்காக அந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அந்த விதிமுறைப்படி 2019 உலகக்கோப்பைக்கு பின் ஓய்வு பெற்ற தோனி 5 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எனவே அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி 4 கோடி என்ற குறைந்த தொகைக்கு சிஎஸ்கே தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திட்டங்களை வகுப்பதில் தோனியை விட சிறந்தவர் இருக்க முடியாது என ஐபிஎல் சேர்மன் அர்ஜுன் துமால் தெரிவித்துள்ளார். எனவே தோனிக்காக கொண்டு வரப்பட்ட அன்கேப்ட் விதிமுறையை பயன்படுத்தி அமித் மிஸ்ரா, ஃபியூஸ் சாவ்லா போன்ற மூத்த இந்திய வீரர்களும் வாய்ப்பு பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஸ்பெஷல் விதிமுறை:

“ஒரு போட்டிக்காக திட்டமிடல் என்று வரும் போது தோனியை விட இங்கே சிறந்தவர் இருக்க முடியாது. கேப்ட் அல்லது அன்கேப்ட் என எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் தோனியை எந்த விலைக்கும் வாங்க அனைத்து அணிகளும் விரும்பும். எனவே அந்த விதிமுறை தோனிக்கு மட்டும் விதிவிலக்கு என்று நான் நினைக்கவில்லை. அது நம் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்”

இதையும் படிங்க: அவங்க 2 பேரை எதிர்த்து இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடுவது உண்மையிலேயே கஷ்டம் தான் – ரச்சின் ரவீந்திரா அச்சம்

“ஏனெனில் இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் வந்து விட்டதால் சீனியர் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஃபிட்டாக உள்ளனர். குறிப்பாக அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா இந்திய அணியில் நீண்ட காலமாக இல்லையென்றாலும் ஐபிஎல் தொடரில் அசத்துகின்றனர். எனவே அன்கேப்ட் வீரர் விதிமுறை வயதானாலும் திறமையால் ஃபிட்டாக இருந்து ஐபிஎல் தொடரில் நெருப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்” என்று கூறினார்.

Advertisement