இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு வெளியேறியது. உலகக்கோப்பை தொடருக்கு பின்னரும் பாகிஸ்தான் அணி படு மோசமான ஆட்டத்தால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அந்த அணியின் செயல்பாடு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் வாசிம் கான் விவாதித்தார். அதனை தொடர்ந்து தற்போது அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை மாற்றி மாற்றி விட்டு அவருக்கு பதிலாக பாபர் அசாம் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போதும் சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்பராஸ் அஹமது திடீரென்று நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அசார் அலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் டி20 கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிறப்பாக செயல்படாத சர்பராஸ் அஹமது ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வந்ததும் அவரது உடல் தகுதி குறித்து பலரும் கிண்டல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது இந்த அதிரடி மாற்றத்தை அணியின் முன்னேற்றத்திற்காக செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



