ப்ரித்வி ஷா குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட இங்கிலாந்து நாயகன் ஆர்ச்சர் – காரணம் இதுதான்

Archer
- Advertisement -

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் மாதம் 2015 இளம் வீரர் ப்ரித்வி ஷா குறித்து அவர் (unlucky shaw) அன்லக்கி ஷா என்று ட்வீட் செய்துள்ளார்.

Archer

- Advertisement -

அவர் ஏன் இந்த ட்வீட்டினை அப்போது செய்தார் என்று விளக்கம் தெரியவில்லை என்றாலும் அதனை தற்போது இணையத்தில் கண்டறிந்த இந்திய ரசிகர்கள் அவரது டிவீட்டிற்கு தொடர்ந்து கமெண்ட் செய்து அவரை விமர்சித்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட ப்ரித்வி ஷா வருத்தத்தில் இருக்கும் பொழுது தற்போது இந்த ட்வீட் வைரல் ஆகி வருவததால் பலரும் ஆர்ச்சரின் இந்த டிவீட்டை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

Shaw

ஆனால் அந்த ட்வீட்டை ஆர்ச்சர் எதற்காக செய்தார் அது இப்போது எப்படி சூடுபிடித்தது என்ற விவரங்கள் குறித்த விவரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ட்வீட் ப்ரித்வி ஷாவின் ஊக்கமருந்து சோதனை மற்றும் தடைக்காக பதிவு செய்யப்பட்டது என்சரு ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டு அவரை திட்டித்தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement