இன்னும் நீங்க அடங்கமாட்டீங்களா ? வீடியோ மூலம் ஸ்மித்தை வெறுப்பேற்றிய ஆர்ச்சர் – வைரல் வீடியோ

Archer
- Advertisement -

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் பேட்டிங் செய்ய சிரமப்பட்டார். மேலும் ஆர்ச்சர் பந்துவீச்சில் கழுத்துப் பகுதியில் அடிவாங்கிய அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆர்ச்சர் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டாவது டெஸ்ட் ஸ்டீவ் ஸ்மித் எவ்வாறு பந்தினை எதிர்கொள்ளாமல் அதன் வேகத்தை கணிக்க முடியாமல் திணறினர் என்பதனை அதனை போன்றே ஆர்ச்சர் செய்து காண்பித்து வீடியோவினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஸ்டீவ் ஸ்மித் நடனமாடி விளையாடினார் என்று இங்கிலாந்து அணியின் மகளிர் கிரிக்கெட் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங்கை கிண்டலாக கூற தற்போது அதே பேட்டிங் ஸ்டைலில் ஆர்ச்சர் வீடியோ வடிவில் கிண்டல் செய்துள்ளது ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் ஆர்ச்சருக்கு எதிராக கமெண்டுகளையும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement