Worldcup : தென்னாப்பிரிக்க வீரரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கிய ஆர்ச்சரின் பவுன்ஸ் – விவரம் இதோ

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

amla
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் நேற்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்கியது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு ஆடத்துவங்கிய தென்னாபிரிக்க அணியின் துவக்க வீரரான ஆம்லா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் ஹெல்மெட்டில் அடிவாங்கினார். இதனால் சற்று நிலைமை இழந்த அவர் போட்டியின் பாதியில் வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

amla 1

நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதனபடி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. பிறகு 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்தது.

Advertisement