ஸ்மித்துக்கு பதிலாக வந்தவரையும் ஆர்ச்சர் விட்டுவைக்கவில்லை. இன்னா அடி – விடீயோவை பாருங்க

Marnus
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

Smith

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 148 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது. இதன் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித் சிறிது நேரம் கழித்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லாபுசாக்னே இரண்டாவது இன்னிங்சில் ஆடினார்.

இரண்டாவது இன்னிங்சில் ஸ்மித்துக்கு பதிலாக வந்த மார்னஸ் லாபுசாக்னேவையும் ஆர்ச்சர் விட்டுவைக்கவில்லை. முதல் பந்திலேயே தனது அபாரமான பவுன்சர் மூலம் அசுர வேகத்தில் மார்னஸ் லாபுசாக்னே ஹெல்மெட்டில் ஆர்ச்சர் தாக்கினார். உடனே வீரர்கள் அனைவரும் அவரிடம் சென்று நலம் விசாரித்தனர். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்குள் வந்து நலமாக உள்ளதா என்று பரிசோதித்தார். இதோ அந்த வீடியோ :

அதன் பிறகு மீண்டும் விளையாட துவங்கிய மார்னஸ் லாபுசாக்னே சிறப்பாக விளையாடி 59 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி போட்டியை டிரா செய்ய உதவினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஆர்ச்சர் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவித்ததை நிரூபிக்கும் விதமாக அவர் தொடர்ந்து அசுர வேகத்தில் பந்து வீசி வருவது இந்த தொடரை அதிக சுவாரசியமாக வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement