Jofra Archer : அதற்குள் இவ்வளவு பெரிய சாதனையா அசரவைத்த – ஆர்ச்சர்

உலக கோப்பை தொடரின் 19வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Archer
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 19வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்துஅணியும் மோதின.

eng vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பூரான் 63 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து சார்பாக ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 9 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூட் ஆட்டமிழக்காமல் 100 ரன்களை அடித்தார் அதுமட்டுமின்றி பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரூட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Root

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் உலக சாதனையையும் படைத்துள்ளார். அது யாதெனில் இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் உலக கோப்பை தொடரில் 3 விக்கெட்டுகளை மூன்று போட்டிகளில் முதன் முறையாக வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Archer 1

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் பிறந்த ஆர்ச்சர் அங்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இங்கிலாந்தில் குடியேறி தற்போது இங்கிலாந்து அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை தொடருக்கு முன் அவர் சர்வதேச போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இருப்பினும் அவரை அணியில் தேர்வு செய்து விளையாட வைத்து இன்று இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வீரராக அவர் உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement