இந்திய வீரரான பும்ராவை விட இவரே உலகின் மிகச்சிறந்த பவுலர் – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாக் வீரர்

Aqib

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யுப் ஜாவித், இவர் எப்போதுமே இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களோடு ஒப்பீடு செய்து வம்பிழப்பதையே வேலையாக கொண்டுள்ளார். இப்போது மீண்டும் அதே வேலையை செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாமுடன் ஒப்பீடு செய்து சர்ச்சைக்கு உள்ளானார். இப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பீடு செய்துள்ளார்.

Bumrah-1

ஷாகின் அப்ரிடி கொண்டுள்ள பந்து வீசும் நுணுக்கங்களை ஒப்பீடு செய்யும்போது பும்ராவின் நுணுக்கங்கள் மிகவும் குறைவுதான். எனவே ஷாகீன் அப்ரிடியே சிறந்த பந்துவீச்சாளர் ஆவார் என்ற சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது : பும்ரா ஒரு டெத் பெஷலிஸ்ட் மட்டும்தான் அவரால் புதிய பந்துகளில் பலவிதமான வேறியேஷன்களைப்போட்டு விக்கெட் எடுக்க இயலாது. ஆனால் ஷாகின் அப்ரிடியோ புதுப்பந்தில்கூட பல வேரியேஷன்கள் காட்டி விக்கெட் வீழ்த்தக்கூடியவர்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் பும்ராவிற்கு வழங்கும் சுதந்திரத்தை போன்று சாஹின் அப்ரிடிக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். முக்கியமான தொடர்களில் மட்டுமே ஷாகித் அப்ரிடியை விளையாட வைத்து அவரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

shaheen

37 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 87 விக்கெட்டுகளை வீழ்த்தி 22.1 சராசரி வைத்துள்ளார். அதேநேரத்தில் அப்ரிடி 48 டெஸ்ட் விக்கெட்டுகளை 23 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். சராசரியாக 32.3 வைத்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பும்ரா 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி, 4.64 சராசரி வைத்துள்ளார். ஆனால், அப்ரிடி 24 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி 5.47 சராசரி வைத்துள்ளார்.

- Advertisement -

Shaheen

டி20 போட்டிகளில் கடந்த 2018லிருந்து 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார். அப்ரிடி 20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும் புள்ளி விவரங்களின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால்கூட பும்ராவே சிறந்தவர்.