- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனது கணவர் அடித்த 76-ஆவது சர்வதேச சதத்தை வாழ்த்தி அனுஷ்கா சர்மா வெளியிட்ட பதிவு – வைரலாகும் புகைப்படம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிரினிடாட் நகரில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 206 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 86 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-வது சதத்தை அடித்த விராட் கோலிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் விராட், ரோஹித் இடத்தை நிரப்ப அவங்க தான் சரியானவங்க – தமிழக வீரர் உட்பட 3 பேரை ஆதரித்த வாசிம் ஜாஃபர்

அந்த வகையில் விராட் கோலி சதம் அடித்த பின்னர் தனது பேட்டினை உயர்த்தி நிற்கும் படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா பெரிய “ரெட் ஹார்ட்டின்” இமோஜி ஒன்றினை பகிர்ந்து தனது காதல் கணவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by