தோனியை முதல்முறை பார்க்கும் போது இவ்ளோ ஒர்த்துனு நான் நெனைக்கவேயில்ல – ஆன்ட்ரிச் நோர்க்கியா வெளிப்படை

Nortje-1

தென்ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆன்ட்ரிச் நோர்க்கியா கடந்து 2019ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமாகி 10 டெஸ்ட் போட்டிகள் 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அணி தவிர ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவர் 16 போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

nortje 1

தென் ஆப்பிரிக்க அணியின் அதிவேகப் பந்து வீச்சாளராக கடந்த சில ஆண்டுகளாக திகழ்ந்து வரும் இவர் தற்போது தான் 16 வயதில் இருந்தபோது தோனிக்கு எதிராக தான் பந்து வீசிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி 2010ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் சவுத் ஆப்பிரிக்காவில் நடந்த பொழுது சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனிக்கு எதிராக நெட் பவுலிங்கில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அந்த சமயத்தில் அவ்வளவு பெரிய பையன் கிடையாது. ஆனாலும் நான் யாருக்கும் எதிராக பந்து வீசுவதிலும் பயந்ததில்லை. அப்போது ஒரு முறை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தோனி நெட்டில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தோனிக்கு பேட்டிங் தெரியாது என்றுதான் நினைத்தேன்.

nortje

மேலும் அது தோனி தான் என்றும் எனக்குத் தெரியாது. நான் அவருக்கு எதிராக பந்துவீசும் போது ஒரு இரண்டு பந்துகளை அவர் எந்தவித கால் நகர்வுகளும் இன்றி தூக்கி அடித்தார். அதன் பின்னரே நான் தோனி எவ்வளவு பெரிய வீரன் என்று உணர்ந்ததாக நோர்க்கியா கூறியுள்ளார்.

- Advertisement -

nortje 2

நான் பொய் கூற விரும்பவில்லை. தோனியை முதல்முறை பார்த்தபோது அவருக்கு சுத்தமாக பேட்டிங் தெரியாது என்றுதான் நினைத்தேன் என்று நோர்க்கியா கூறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நோர்க்கியா டெல்லி அணியை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி வரை கொண்டு செல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement