சி.எஸ்.கே வை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம் – நட்சத்திர வீரர் விலகல்

Dc
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் 26-ஆம் தேதி பதினைந்தாவது ஐபிஎல் சீசன் துவங்க உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்த 15-வது சீசன் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்று பிசிசிஐ உறுதியாக இருந்ததின் காரணமாக தற்போது அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 15-வது சீசன் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்தான அட்டவணையும் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியை உறுதிப்படுத்தி தற்போது இந்த தொடரில் பங்கேற்க இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ipl

- Advertisement -

மேலும் பிசிசிஐ இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தையும் சரியான முறையில் வகுத்து இந்த ஐபிஎல் தொடரில் திட்டமிட்டபடி விளையாட அனைத்து வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளது. அந்த வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தங்கள் அணியில் உள்ள வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான தீபக் சாகர் காயமடைந்தது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது டெல்லி அணியும் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. ஏனெனில் டெல்லி அணியால் தக்க வைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரான ஆண்ரிச் நோர்க்கியா இந்த ஐபிஎல் தொடரை தவிர விடவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

nortje 1

ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக ஒரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்கிற அடிப்படையில் டெல்லி அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட்டும், துவக்க வீரராக ப்ரித்வி ஷா மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோருடன் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவையும் தக்க வைத்திருந்தது.

- Advertisement -

ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதலே காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வரும் நோர்க்கியா பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெற உள்ள சர்வதேச தொடரிலும் தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே அவருக்கு இடுப்பு பகுதி மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள சில காயங்கள் காரணமாக சிகிச்சையில் உள்ளதால் அவரது காயம் குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என்பதால் இந்த ஐபிஎல் தொடரை அவர் முழுவதுமாக வறவிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியால் எழுந்த பிரச்சனை. ஆர்.சி.பி நிர்வாகம் அடித்த யு டர்ன் – லேட்டாக இதுதான் காரணமாம்

மேலும் காயம் காரணமாக அவர் அதிகாரபூர்வமாக அணியில் இருந்து வெளியேற இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் தற்போது டெல்லி அணி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. டெல்லி அணியில் தற்போது மாற்று வீரர்கள் அவரது இடத்தை நிரப்ப தயாராக இருந்தாலும் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் அவரது இடத்தை நிரப்புவது என்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

Advertisement