அக்சர் பட்டேலை தொடர்ந்து டெல்லி அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா – டெல்லி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

- Advertisement -

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் ஆரம்பிக்கும் நேரத்தில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா, பெங்களூரு வீரர் படிக்கல் மற்றும் டெல்லி அணியின் வீரர் அக்சர் பட்டேல் ஆகியோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது டெல்லி அணியை சேர்ந்த மற்றொரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான கிரிக்கெட் தொடரிலிருந்து ஐபிஎல்லில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா வீரர் அன்ட்ரிக் நோர்க்கியாவிற்க்கு கொரனோ தொற்று உறுதியாகியுள்ளது.

nortje 1

ஆன்ட்ரிக் நோர்க்கியா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அணியுடன் இணைவதற்காக இவர் இந்தியா வந்தபோது இவருக்கு கொரானா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததைத் தொடர்ந்து இவர் 10 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் கழித்து மீண்டும் எடுக்கப்படும் கொரனோ பரிசோதனை நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில் மட்டுமே இவர் ஐபிஎல்லில் பங்கேற்க இயலும்.

- Advertisement -

ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இன்னொரு வீரரான அக்சர் படேல் கரோனா பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளார். அதற்குள்ளாக அந்த அணியின் இன்னொரு வீரர்க்கு கொரோனோ பாசிட்டிவ்வாக இருப்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

nortje 2

ஆன்ட்ரிக் நோர்க்கியாவுடன் மற்ற வீரர்கள் தொடர்பில் இல்லாததால் அணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் விளையாட வந்துள்ள அனைத்து தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

nortje

டெல்லி அணி தன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது அதில் டெல்லி அணியின் பவுலர்கள் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நோர்க்கியாவுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடாமல் இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

Advertisement