ஐ.பி.எல் தொடரில் 156.2 கி.மீ வேகத்தில் பந்துவீசி அதிவேக பந்துவீச்சை பதிவு செய்த டெல்லி வீரர் – யார் தெரியுமா ?

nortje
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் பெரிய ஜாம்பவான் அணிகளுக்கு சரியாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தங்களது இடத்திற்காக போராடி வருகின்றன. அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கனகச்சிதமாக அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது .

nortje 2

- Advertisement -

டெல்லி அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்ததை அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே அசுர வேகத்தில் பந்து வீசி கொண்டிருந்தார் .

nortje 1

ஒரு ஓவர் முழுவதற்கும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிக் கொண்டிருந்தார். அந்த ஓவரில் 156.2 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்தினை வீசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் சாதனையையும் படைத்துள்ளார். 2012ஆம் ஆண்டிற்கு பிறகு இவ்வளவு வேகத்தில் ஒரு பந்து வீச்சாளர் தற்போதுதான் வீசுகிறார். இந்த போட்டியில் 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் அன்ரிச் நோர்ட்ஜே.

Advertisement