தமிழில் கெத்தா டிவீட் போட்ட மற்றொரு சென்னை வீரர் ! – எதற்காக தெரியமா ?

jadeja
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஜூரம் இப்போதிலிருந்தே தொற்றிக் கொண்டுள்ளது. ஐபிஎல் தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அதனை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வரும் ரசிகர்கள் அதுதொடர்பான செய்திகளையும் தேடித்தேடி படித்துவருகின்றனர்.ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக ஹர்பஜன்சிங் எப்போது ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்தே அவர் தமிழில் டிவீட் போட்டு அசத்திவருகின்றார்.

HarbhajanSingh6

- Advertisement -

அதேபோல தற்போது அவருக்கு அடுத்தபடியாக சென்னை அணி ரசிகர் அதிகமாக விரும்பிடும் அதிரடி ஆட்டக்காரரும் ஆல்-ரவுண்டருமான சுரேஷ்ரெய்னாவும் தற்போது டிவிட்டரில் தானும்,முரளிவிஜயும் இருக்கும் படத்தை போட்டு தமிழில் டிவீட் செய்துள்ளார்.அந்த டிவீட்டில் “என் இனிய நண்பன் முரளிவிஜயுடன் இணைந்து கலக்குவோம் இந்த ஐபிஎல்-இல்” என்று தமிழில் எழுதியுள்ளார்.

அந்த டிவீட் தற்போது சமூகவலைத்தளங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.இதற்கு முன்னதாக தான் சென்னை அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் “வணக்கம் தமிழ்நாடு. இனிமேல் உங்ககூட கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோசம்.

vijay

உங்க மண்ணு இனி என்ன வைக்கணும் சிங்கமுன்னு” என்று டிவீட் செய்து அசத்தினார். அந்த டிவீட் தமிழர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் மகளிர் தினத்தன்று அதேபோல தமிழில் மற்றொரு டிவீட் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement