அரையிறுதி போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு இந்த நெருக்கடி இருக்கும் – அணில் கும்ப்ளே எச்சரிக்கை

Kumble and Abhishek
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது மார்ச் 4-ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. பின்னர் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது.

அபிஷேக் சர்மாவை எச்சரித்த அணில் கும்ப்ளே :

ஆனால் சூப்பர் 8 சுற்று போட்டியின் போது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்து படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின்னர் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி அடைந்தாலும் இந்த அரையிறுதி போட்டி கடுமையான சவாலாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த உலக கோப்பை தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் ஷர்மா ஒரே ஒரு அரை சதத்துடன் இதுவரை தான் விளையாடியுள்ள 6 போட்டிகளில் 80 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தனிப்பட்ட முறையில் அதிக அழுத்தம் இருக்கும் என்றும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே இந்த அரையிறுதி போட்டிக்கு முன்னதாக அபிஷேக் சர்மா குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா மனதில் இப்போது குழப்பம் நிறைந்துள்ளது. தன்னிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அணி வெற்றி பெற்று வருவதால் அவரது ஆட்டம் மீது எந்த விமர்சனமும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரில் தோல்வியடைந்த பிறகு பாக் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் – விவரம் இதோ

ஆனால் அரையறுதி போட்டியின் போது அவர் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எண்ணத் தொடங்குவார். அதனால் அவரே அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி இங்கிலாந்து அணியும் சுழற்பந்து வீச்சார்களை பவர்பிளே ஓவர்களில் பயன்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுக்கும் என்று அணில் கும்ப்ளே அவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement