இப்படி ஒரு வீரரை எப்படி விட்டாங்கனு தெரியல.. அதுதான் ராஜஸ்தான் செய்த மிகப்பெரிய தப்பு – அணில் கும்ப்ளே கருத்து

Anil Kumble
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் பரிதாப நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் தங்களது ஒன்பதாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

ராஜஸ்தான் அணி செய்த பெரிய தப்பு இதுதான் : அணில் கும்ப்ளே

இந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு பிளே ஆப் வாய்ப்புள்ள வேளையில் இனி அவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்ற நிலை ஆகிவிட்டது.

- Advertisement -

இப்படி ராஜஸ்தான் அணி சரிவை சந்திக்க அந்த அணியின் வீரர்கள் தேர்வே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மெகா ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் அணி நட்சத்திர வீரர்களான ஜாஸ் பட்லர், ட்ரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் போன்ற முக்கிய வீரர்களை வெளியேற்றியது.

அதன் காரணமாக தற்போது வலிமையான பிளேயிங் லெவன் இல்லாமல் அந்த அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்னதாக பட்லரை தக்க வைக்காதது ராஜஸ்தான் அணி செய்த தவறு என்றும் அது தனக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒரு விடயமாக இருப்பதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே சில முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

பட்லர் போன்ற ஒரு வீரர் ராஜஸ்தான் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தவர். எதிரணியை சேதப்படுத்தியதில் முக்கிய வீரராக இருந்த அவரை ராஜஸ்தான் அணி தக்கவைக்காதது எனக்கு பெரிய ஆச்சரியம் அளிக்கிறது. அதோடு ராஜஸ்தான் அணியின் பலம் வாய்ந்த வீரராக இருந்தும் அவரை ஏன் அந்த அணி வெளியேற்றியது என்பது புரியவில்லை இருந்தாலும் இது போன்ற விடயங்கள் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

இதையும் படிங்க : புவனேஷ்வர் குமாருக்கு அடுத்து 2 ஆவது இந்திய பவுலராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

பல அணிகளிலும் இதுபோன்று நடந்திருக்கிறது ஆனால் அப்படி நடந்த பின்னர் அவர்கள் எதிர்மறையான நிகழ்வுகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையிலே ராஜஸ்தான் அணி தற்போது பட்லர் இல்லாமல் தடுமாறி வருகிறது என அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement