நான் உங்கள் பக்கம். நீங்க செய்தது எல்லாம் சரிதான். கவலைப்பட வேண்டாம் – வாசிம் ஜாபருக்கு ஆதரவு செய்த கும்ப்ளே

Kumble
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உள்ளூர் கிரிக்கெட்டின் சாதனை நாயகனுமான வாசிம் ஜாபர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர் மதத்தின் அடிப்படையில் வீரர்களை தேர்ந்தெடுத்ததாக அவரது மீது உத்தரகாண்ட் சங்கத்தின் செயலாளர் மகிமா என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் சூடு பிடித்துள்ளது.

jaffer 1

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஜாபர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். மதரீதியில் வீரர்களை தேர்வு செய்யவில்லை எனவும் வீரர்களை தேர்வு செய்வதில் தனக்கு சில அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும், சிலர் சிபாரிசின் மூலம் வீரர்களை அணியில் தேர்வு செய்யுமாறும் அவரை அணுகியதாகவும் அதன் காரணமாக தன்னால் தனது பணியை சரியாக செயல்பட முடியவில்லை என்று அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தற்போது ஜாபர் மீது மதரீதியாக அணி வீரர்களை தேர்வு செய்கிறார் என்ற குற்றச்சாட்டிற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கும்ப்ளே வாசிம் ஜாபர் க்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். “அதில் நான் உங்கள் பக்கம் வாசிம் நீங்கள் சரியானதை தான் செய்துள்ளீர்கள் உங்களது வழிகாட்டுதலை இழந்தது அந்த வீரர்களின் துரதிஷ்டம் என கும்ப்ளே ட்விட் செய்துள்ளார்.

மேலும் பலர் அவரது இந்த விலகல் குறித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தன் மீதான குற்றச்சாட்டுக்கு மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் பேசியிருந்த வாசிம் ஜாபர் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.

Jaffer

அதில் : சிபாரிசு செய்வதாக சொல்லி தகுதியும் திறனும் இல்லாத வீரர்களை அணியில் சேர்க்கும்படி தன்னை சிலர் நிர்ப்பந்தித்தனர். அதற்கு தான் சம்மதிக்கவில்லை என்றும் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் ஜாபர் மீது சாட்டப்பட்டுள்ள இந்தக் குற்றத்திற்காக பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆமோதித்து அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement