
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறத் தயாராகியுள்ளது. ஏனென்றால் இந்த வருடம் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை 7 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தோல்விக்கு நன்றாக பேட்டிங் செய்யாதது காரணம் என்று கேப்டன் தோனி கூறினார். மேலும் ஒரு ஓட்டையாக இருந்தால் அடைக்கலாம் சிஎஸ்கே அணி முழுவதும் ஓட்டையாக இருந்தால் எப்படி அடைப்பது? என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதை அடுத்து 2026இல் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை இப்போதே சிஎஸ்கே துவங்கியுள்ளது.
அதன் ஒரு படியாகவே ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு சென்னை நிர்வாகம் வாய்ப்பளிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் பவுலிங் துறையில் டெத் ஓவரில் சிஎஸ்கே நிர்வாகம் பதிரனாவை மட்டும் நம்பிக் கொண்டிருக்கக் கூடாது என ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவின் நாதன் எலிஸ்க்கு வாய்ப்பு கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ரச்சின் ரவீந்திராவை 3வது இடத்தில் களமிறக்கினால் அசத்துவார் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ப்ரேவிஸ், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களுக்கு சென்னை அணி வாய்ப்பளிக்கும் முடிவை வரவேற்கும் கும்ப்ளே இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரச்சின் ரவீந்திரா அற்புதமான திறமை கொண்ட இளம் வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் அவசரப்படுவது போல் தெரிகிறது”
“அவருக்கு 3வது இடம் பொருத்தமாக இருக்கும். அதே போல சென்னை அணியின் மிடில் ஆர்டரில் சிவம் துபேவை தவிர்த்து யாரும் அசத்தவில்லை. அதனால் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ் வாய்ப்புகளைப் பெறுவது நேர்மறையான அறிகுறியாகும். இது போக சிஎஸ்கே பதிரனாவை தாண்டி சிந்திக்க வேண்டும். நாதன் எலிஸ் அனுபவமிக்க டெத் பவுலர். இதற்கு முன்பும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்”
இதையும் படிங்க: 43 வயதிலும் உழைக்கும் தல தோனி மேல அந்த பழி போடாதீங்க.. சிஎஸ்கேவை அவங்க வாங்குறாங்க.. ரெய்னா பேட்டி
“இருப்பினும் அவருக்கு முதல் போட்டியைத் தவிர்த்து வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இன்னும் 5 போட்டிகள் இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி அவரைப் போன்ற வீரருக்கும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து தங்கள் அடுத்தப் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது