இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இவர் தனது முழு பலத்துடன் இருப்பார் – அணில் கும்ப்ளே எதிர்பார்ப்பு

Kumble

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்த மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே தற்போது விளையாட முடிவு செய்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு வெளியேறிவிட்டார். தற்போது இவருக்கு ஐபிஎல் தொடர் மட்டுமே இருக்கிறது என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அழுத்தம் இல்லாமல் நன்றாக விளையாடுவார் என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

Raina

மேலும் சுரேஷ் ரெய்னா இல்லாத நேரத்தில் அவர் மூன்றாவது இடத்தில் கூட களமிறங்கி பழைய தோனியை போல அதிரடியாக ஆட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான அணில் கும்பில டோனியை பற்றி பேசியிருக்கிறார் அவர் கூறுகையில் :
இந்த வருடம் தோனி மிகவும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

எப்போது அவர் எந்த அணிக்காக ஆடினாலும் தனது 100 சதவீத விளையாட்டை கொடுப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இந்த முறையும் அப்படித்தான் இருக்கும். சொல்லப்போனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அழுத்தம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவர் இன்னும் சுதந்திரமாகவும் தெளிவாகவும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவர் தோனி.

Dhoni

அதேநேரத்தில் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தவிர மற்ற ஏழு அணிகளிலும் வெளிநாட்டு வீரர்கள் தான் தலைமை பயிற்சியாளராக இருக்கின்றனர். இப்படி இருக்கக் கூடாது
அனைத்து அணிகளும் இந்திய வீரர்கள் தான் பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும். முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்படும் பயிற்சியாளர்கள் என பலர் இருக்கிறார்கள்.

- Advertisement -

Dhoni

அவர்களை எல்லாம் பயிற்சியாளர்களாக நியமிக்கலாம். உண்மையாகவே இது இந்திய வளங்களின் பிரதிபலிப்பு கிடையாது. இந்தியாவில் ஏராளமான வீரர்கள் திறமைகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே.