இந்தவொரு இந்திய பவுலரை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்குமே அவ்ளோ ஈஸி கிடையாது – அணில் கும்ப்ளே பாராட்டு

Kumble
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

IND vs WI Rohit Sharma

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அற்புதமாக பந்து வீசிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

இப்படி அவர் முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்த 12 விக்கெட்டுகள் மூலம் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்து வரும் அஸ்வின் இன்னும் பல சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சை பாராட்டி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கூறுகையில் :

Ashwin 2

ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்புவதில் வல்லவர். ஒரு பேட்ஸ்மேன் களத்தில் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை முன்கூட்டியே கணித்து அவர்களுக்கு ஏற்றவாறு பந்தை திருப்புகிறார். அதோடு பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் பீல்டர்களை நிறுத்தி அதன் மூலம் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த 10 வருஷத்துக்கு இவரை யாராலும் அசைக்க முடியாது. இந்திய இளம்வீரரை பாராட்டிய – விக்ரம் ரத்தோர்

அவருக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனுமே ரன் அடிப்பது சிரமமாக இருக்கிறது. அதோடு அவரது பந்து வீச்சை தடுப்பாட்டத்தில் விளையாட நினைக்கும் வீரர்களை அவர் எளிதில் வீழ்த்தி விடுகிறார். குறிப்பாக பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து அவர் பந்து வீசுவது அவருடைய இந்த வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது என அணில் கும்ப்ளே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement