- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கொஞ்சமா வாய்ப்பு கிடைச்சாலும் இந்த விடயத்தில் குல்தீப் யாதவ் அசத்துராரு – அனில் கும்ப்ளே பாராட்டு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தனர்.

குல்தீப் யாதவ் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்துகிறார் : அனில் கும்ப்ளே

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 248 ரன்களுக்கு சுருண்டது. அதன் காரணமாக 270 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

அதன்படி தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவிந்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ் இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் கூறியதாவது : குல்தீப் யாதவ் ஒரு அற்புதமான பவுலர். அவருக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகர். அவருக்கு இதுவரை குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதில் அனைத்திலும் போட்டியை வெல்லக்கூடியவராக திகழ்ந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இந்த போட்டியிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஒரே போட்டியில் 2 உலகசாதனையை படைத்து அசத்திய ஸ்ம்ரிதி மந்தனா – விவரம் இதோ

தொடர்ச்சியாக அணியில் இடம் கிடைக்காமல் இப்படி அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பில் ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவது அரிதான ஒன்று. சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து என எவ்வகையான போட்டிகளிலும் அசத்தும் வீரராகவும் அவர் திகழ்ந்து வருகிறார் என அனில் கும்ப்ளே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -