இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்ஸ் இவங்க 2 பேர்தான். அணில் கும்ப்ளே கணிப்பு – அந்த 2 பேர் யார்?

Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த இரண்டு தொடர்களையும் கைப்பற்றிய இந்திய அணி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவரிடம் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்களாக இருக்கக்கூடிய இரண்டு வீரர்கள் யார்? அவர்களை தேர்வு செய்து கூறும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு பதில் அளித்த அணில் கும்ப்ளே கூறுகையில் : என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் இஷான் கிஷன், பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங்கும் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்களாக மாறுவார்கள் என்று நினைப்பதாக கூறினார். மேலும் தொடர்ந்து பேசி அவர் கூறுகையில் : நான் அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு தற்போது முன்னேறியுள்ளார்.

Arshdeep Singh 1

உண்மையிலேயே அவருடைய இந்த வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அடுத்த சூப்பர் ஸ்டாராக நான் அவரை பார்க்கிறேன். ஏனெனில் தற்போது சிறப்பாக பந்துவீசி வரும் அவர் இன்னும் சற்று அனுபவம் கிடைக்கும்போது இன்னும் மிகப்பெரிய வீரராக மாறுவார்.

- Advertisement -

அதே போன்று பேட்ஸ்மேன்களில் தற்போது இஷான் கிஷன் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறார். அவரால் நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று கும்ப்ளே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷன் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச நாட்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது 210 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : 150 கி.மீ பந்தால் ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட உம்ரான் மாலிக் – பெய்ல்ஸ் எங்கே பறந்தது தெரியுமா? ரசிகர்கள் வியப்பு

அதன் பிறகு இலங்கைத் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத அவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு டி20 தொடரிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான அர்ஷ்தீப் சிங் இதுவரை 25 போட்டியில் விளையாடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement