நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியது. அந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65, கான்வே 76 எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின் 3, சுந்தர் 7 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 103 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 198 ரன்கள் குவித்துள்ளது.
திணறும் விராட் கோலி:
டாம் லாதம் 86 ரன்கள் குவித்து அசத்திய அந்த அணிக்கு களத்தில் டாம் ப்ளண்டல் 30*, கிளன் பிலிப்ஸ் 9* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் வெற்றி பெறுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் 12 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்திக்கும்.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்தின் பகுதி நேர பவுலரான க்ளன் பிலிப்ஸ்சுக்கு எதிராக அவுட்டான விராட் கோலி இப்போட்டியிலும் சான்ட்னருக்கு எதிராக மோசமான ஷாட் அடித்து பெவிலியன் திரும்பினார். அதற்கு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத விராட் கோலி துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கியதே காரணம் என்று அனில் கும்ப்ளே ஜாம்பவான் தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் பிரச்சனை:
குறிப்பாக 2024 இங்கிலாந்து தொடரில் சொந்த காரணத்துக்காக விலகிய விராட் கோலிக்கு துலீப் கோப்பையில் பிசிசிஐ விடுப்பு கொடுத்தது. அதே போல சூப்பர் ஸ்டாராக இருப்பதால் விராட் கோலி உள்ளூரில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் வலைப்பயிற்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த வங்கதேச தொடரில் விளையாடிய விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதே போல இந்த தொடரிலும் இப்படி சுழலுக்கு எதிராக தடுமாற அதுவே முக்கிய காரணம் கும்ப்ளே கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓரிரு உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருந்தால் அது இங்கு உதவியிருக்கும். ஏனெனில் முதன்மையான போட்டியில் விளையாடுவது பயிற்சி எடுப்பதை விட அதிகமாக உதவும். அது உங்கள் கையை ஓங்க வைக்கும். அதே சமயம் சுழலுக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவதற்கு அது மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: 301 ரன்ஸ்.. 12 வருடம்.. தசாப்தம் காணாத அவமானத்துக்கு தயாராகுங்க? இந்தியாவை மிரட்டும் நியூஸிலாந்து
“களத்திற்கு அவர் பேட்டிங் செய்ய வரும் போது பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னிங்ஸின் தொடக்கத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அவர் சவால் கொடுக்கும் முனைப்புடன் விளையாடினார். ஆனால் சூழ்நிலைகள் எதிரணி ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தன. ஒரு தந்திர அகர்வால் கொண்டு வரப்பட்ட கிளன் பிலிப்ஸ் சுழலில் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் வெளியேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியது” என்று கூறினார்.



