- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிட்ச், முதல் பேட்டிங்கை விட.. இந்தியா 46க்கு ஆல் அவுட்டாக இது தான் உண்மை காரணம்.. அனில் கும்ப்ளே பேட்டி

பெங்களூருவில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தது அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 180-5 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது மட்டும் இந்தியா 46க்கு ஆல் அவுட்டாக காரணமில்லை என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மாறாக வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் நியூசிலாந்து வீசிய தரமான பந்துகளை மதிக்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அடிக்க முயற்சித்ததே முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சரிவுக்கான உண்மை காரணம்:

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “46 ரன்கள் மட்டுமே எடுக்கும் போது இயற்கையாகவே பின்னடைவு ஏற்படும். நீங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளையும் எதிர்பாத்தீர்கள். அதையே நம்முடைய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேடினார்கள். ஆனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பந்து தங்களை நோக்கி வரும் வரை காத்திருந்தனர்”

“ஏனெனில் சில பந்துகள் மீண்டும் மீண்டும் சாதாரண கோணத்தில் வரவில்லை. அதுவே இந்தியா மற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன். ஆம் இந்தியா பேட்டிங் செய்ததை விட நியூசிலாந்து விளையாடும் போது பிட்ச் கொஞ்சம் எளிதாக மாறியது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் வலுக்கட்டாயமாக அடிக்க முயற்சித்தனர்”

- Advertisement -

சுமாரான பேட்டிங்:

“மறுபுறம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய லென்த் பந்துகளை தவிர்த்து மற்ற பந்துக்காக காத்திருந்தனர். அந்த வகையில் அவர்கள் நன்றாக விளையாடினர். அதுவே நம்முடைய பவுலர்கள் பந்து வீசிய போது விக்கெட்டுகள் கிடைக்காமல் வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலியை ராசியில்லாத சுமாரான 3வது இடத்தில் களமிறங்கியது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்

அவர் கூறுவது போல இந்தியா 46க்கு சுருண்ட அதே பிட்ச்சில் நியூசிலாந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. குறிப்பாக டாம் லாதம் 15, வில் எங் 33 ரன்களில் அவுட்டானாலும் டேவோன் கான்வே 91 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார். அது போக இரண்டாவது நாள் முடிவில் அந்த அணிக்கு களத்தில் டேரில் மிட்சேல் 14*, ரச்சின் ரவீந்திரா 22* ரன்களுடன் சவால் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -