ஐபிஎல் வேற இந்தியா வேற.. கம்பீர் பயிற்சியாளராக வந்தா இதை தவற விட்றக்கூடாது.. கும்ப்ளே அட்வைஸ்

Anil Kumble 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவி காலம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்ற அவருடைய பதவி காலம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டது. தற்போது அதுவும் முடிவடைவதால் ராகுல் டிராவிட் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2007, 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் முக்கிய பங்காற்றினார். அத்துடன் கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்று அவர் இந்த வருடம் ஆலோசகராக சாம்பியன் பட்டம் வென்றார்.

- Advertisement -

கும்ப்ளே அட்வைஸ்:
அதனால் அவரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிக்கும் இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருப்பது வித்தியாசமானது என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில வருடங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார்கள் என்பதால் அதை சரியான வீரர்களை வைத்து நிரப்புவதற்கு கம்பீர் தவறி விடக்கூடாது என்றும் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் ட்ராவிட் அற்புதமான வேலை செய்துள்ளார். அவரின் நலனுக்காகவும் இந்தியாவின் நலனுக்காகவும் இந்த உலகக் கோப்பையை அவர் வெல்வார் என்று நம்புவோம். இந்த நேரத்தில் சில சீனியர் வீரர்கள் தங்களுடைய கேரியரின் இறுதியில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“மாற்றம் நிகழக்கூடிய அந்த நேரத்தில் பேட்டிங், பவுலிங் துறையின் தரத்தை இந்தியா தவற விடாமல் இருப்பதை உறுதி செய்யும் வீரர்கள் உங்களுக்கு தேவை. அந்த மாற்றத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து நகர்த்தலாம். கம்பீர் இந்த வேலைக்கு தகுதியானவர். அவருக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும். இந்தியா மற்றும் டெல்லி அணிகளின் கேப்டனாக இருந்த அவர் அணியை எப்படி கையாள்வார் என்பதை நாம் பார்த்தோம். இந்த வேலையை செய்வதற்கான திறமை அவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி ஃபிட்னெஸ் மட்டும் போதாது.. இந்திய அணிக்கு விளையாட அது கட்டாயமில்ல.. கம்பீர் பேட்டி

“ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. இங்கே நீங்கள் செட்டிலாக நேரம் கொடுக்க வேண்டும். ஒருவேளை கம்பீர் பயிற்சியாளராக வந்தால் நிகழ்காலத்தை மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தையும் பார்க்க வேண்டும். இந்திய அணிக்கு தங்களால் என்ன கொண்டு வர முடியும் என்பதைப் பார்க்கும் பயிற்சியாளரை தேர்வு செய்வது முக்கியம். மேலும் அந்தஸ்த்து கொண்டவராகவும் போட்டியின் சூழ்நிலைகளை சிறப்பாக கையாள்பவராகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும் இருப்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement