விராட் கோலி மாதிரி ஃபிட்னெஸ் மட்டும் போதாது.. இந்திய அணிக்கு விளையாட அது கட்டாயமில்ல.. கம்பீர் பேட்டி

Gautam Gambhir 4
- Advertisement -

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் சிறந்து விளங்குவதற்கு ஃபிட்னஸ் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஃபீல்டிங் துறையில் வேகமாக ஓடி ரன்களை சேமித்து கேட்ச்களை பிடித்து சிறப்பாக செயல்படுவதற்கு ஃபிட்னஸ் அவசியமாகிறது. அதனால் இப்போதெல்லாம் அனைத்து அணிகளிலும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியிலும் இப்போதெல்லாம் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோயோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- Advertisement -

கம்பீர் கருத்து:
எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அது போக ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக சொல்லும் அளவுக்கு விராட் கோலி தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார். அது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் விராட் கோலி சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபிட்னஸ் மட்டும் வைத்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படக்கூடாது என்று கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோயோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஃபிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஃபிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்”

இதையும் படிங்க: வேற யார் அடிச்சா? விராட் கோலியை குறை சொல்லாதீங்க.. ரன்ஸ் அங்க வந்துரும் கவலைப்படாதீங்க.. சஞ்சய் பங்கர்

“எனவே நீங்கள் யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் ஃபிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ-யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்” என்று கூறினார்.

Advertisement