அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று தகுதி பெற்றுவிட்டது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐசிசி தொடர்களின் இறுதிவரை சென்று கோப்பையை தவறவிடும் இந்திய அணியானது இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை நிச்சயம் இந்திய அணி செல்லும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அமெரிக்க ஆடுகளங்களை தாண்டி வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜடேஜா மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அவர்களைப் போன்றே அக்சர் பட்டேலும் செயல்பட கூடியவர் எனவே அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம்.
ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும் அதே போன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச முடியாது என்ற கருத்தை நான் எப்போதும் ஏற்பவன் கிடையாது. எந்த பந்துவீச்சாளர் வேண்டுமானாலும் எந்த ஒரு வீரருக்கு எதிராகவும் சிறப்பாக பந்துவீக்கலாம்.
இதையும் படிங்க : சூப்பர் 8இல் இந்தியா அவரை லெவனில் சேர்க்கனும்.. அதுக்காக டேஞ்சரான ஜடேஜா தூக்கிடாதீங்க.. பிளெமிங் அட்வைஸ்
அன்றைய நாளில் பவுலர்களின் பலம் எவ்வாறு இருக்கிறதோ அதனைப் பொறுத்துதான் போட்டி அமையும். என்னை கேட்டால் நிச்சயம் இந்திய அணி தற்போது உள்ள வீரர்களின் பலத்தை வைத்து இறுதி போட்டி வரை செல்லும். இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும் பட்சத்தில் எப்படி விளையாடுகிறதோ அதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



