சங்கக்காரா, ஜெயவர்த்தனே போன்ற ஜாம்பவான்கள் லிஸ்டில் சேர்ந்த ஆஞ்சலோ மேத்யூஸ் – ஜெயசூர்யாவின் சாதனை முறியடிப்பு

Mathews
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி நேற்று கிரிஸ்ட்சர்ச் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 355 ரன்கள் குவித்துள்ளது.

Mathews

- Advertisement -

இந்த நியூசிலாந்து தொடரின் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் என்பதனால் இந்த தொடரானது இலங்கை அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இலங்கை அணி விளையாடியது. அதன்படி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்திருந்த வேளையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் 355 ரன்கள் இலங்கை அணி ஆல் அவுட்டானது, அதன் பிறகு தற்போது நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Mathews 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இலங்கை அணியின் அனுபவ வீரரான ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் அடித்த இந்த 47 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். ஏனெனில் நேற்று அவர் அடித்த இந்த 47 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் முன்னாள் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையையும் மேத்யூஸ் முறியடித்துள்ளார். அதன்படி ஜெயசூர்யா இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6973 ரன்களை எடுத்திருந்த வேளையில் தற்போது 101 டெஸ்டில் 7000 ரன்களை மேத்யூஸ் கடந்துள்ளார். மேலும் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா ஒன் டே மேட்சை சேப்பாக்கத்தில் நேரில் பாக்கணுமா? – டிக்கெட் விவரம் இதோ

இந்த பட்டியலில் குமார் சங்கக்காரா 12,400 ரன்களுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் ஜெயவர்த்தனே 11,814 ரன்களுடனும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது வீரராக ஆஞ்சலோ மேத்யூஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அவர் 13 சதம் மற்றும் 38 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement