பிடிவாதம் பிடிக்கும் கிரிக்கெட் போர்டு. ஓய்வு முடிவை கையில் எடுத்த சீனியர் வீரர் – விவரம் இதோ

Mathews
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவை ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் தற்போது இலங்கை திரும்ப இருக்கின்றனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில நாட்களாகவே சம்பள பிரச்சினை ஒரு முக்கிய விவாதமாக பேசப்பட்டு வருகிறது.

sl

- Advertisement -

வீரர்களுக்கு இனி அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பல சீனியர் வீரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட மறுக்கவும் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்த போடுவது தவறு என்றும் வீரர்களுக்கான சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் நிர்வாகத்தை எதிர்த்து மேத்யூஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மேத்யூஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த பல மாதங்களாகவே விளையாடவில்லை என்றாலும் அணியின் சீனியர் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போர்டின் புதிய முடிவுகளால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்னும் சில நாட்களில் நான் ஓய்வு பெறுவேன் என்றும் அதுகுறித்து தான் இப்போது சிந்தித்து சிந்தித்து வருவதாகவும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mathews

ஏற்கனவே மூத்த வீரர்கள் இன்றி தவிக்கும் இலங்கை அணி தற்போது மேத்யூஸ்யும் இழக்கும் நிலையில் உள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு கேப்டன் பதவியை துறந்த மேத்யூஸ் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும் இதுவரை ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் இலங்கை அணியின் பிடிவாதம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Mathews 1

தற்போது 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 218 ஒருநாள் போட்டிகள் 78 டி20 போட்டிகள் என கிட்டத்தட்ட 350 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஓய்வை அறிவிக்க உள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முன்னணி வீரர்கள் இன்று படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி இவரும் இல்லாமல் எந்த நிலைக்கு ஆளாக போகிறதோ என்ற பயத்தில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement